பங்கு மொழிகள்

பங்கு மொழிகள்


1. பங்குகளைப் பார்த்துப் பார்த்து வாங்குங்கள். காலா காலத்திற்கும் வைத்திருங்கள்.


2. ஒருவர் நிழலில் உட்கார்ந்திருக்கிறார் என்றால் பல்லாண்டுகளுக்கு முன் ஒருவர் மரம் ஒன்றை நட்டிருப்பதாகப் பொருள்.


3. பங்குகளை, நம்பத்தகுந்த வருமானத்துக்குரிய ஒரு ஆதார சுருதியாகக் கருதுங்கள்.


4. பங்குச்சந்தையில் காலக்கணிப்பு (timing) என்பது முக்கியமல்ல. எவ்வளவு காலம் (time) இருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.


5. முதலீடு செய்ய எது உகந்த நேரம் என்றால் எப்போது உங்களிடம் பணம் இருக்கிறதோ அப்போது தான்.


6. ஒரு மரத்தை நட சிறந்த நேரம் இருபது வருடங்களுக்கு முன்பு இருந்தது. இரண்டாவது சிறந்த நேரம் இப்போது.


7. கணிப்பு என்பது மிகவும் கடினமானது. அதிலும் குறிப்பாக எதிர்காலத்தைக் குறித்தானது.


8. பங்குச்சந்தையில் பிரதானமாக இரண்டு உணர்ச்சிகள் தான் செயல்படுகின்றன. ஒன்று நம்பிக்கை. மற்றொன்று பயம். பிரச்னை என்னவென்றால் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டிய நேரத்தில் பயம் கொள்கிறோம். பயம் கொள்ள வேண்டிய நேரத்தில் நம்பிக்கை கொள்கிறோம்.


9. விலை என்பது நீங்கள் கொடுப்பது. மதிப்பு என்பது நீங்கள் பெறுவது.


10. பங்குகள் எப்போது சுவாரஸ்யமாக இருக்கிறதென்றால் ஏறக்குறைய எல்லோரும் பங்குகளில் சுவாரஸ்யத்தை இழக்கும் போது தான்.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

Daniel Crosby - மணி மொழிகள்

பங்குச்சந்தை பதில்கள் - 14