நகை மொழிகள் - 1

நகை மொழிகள் - 1


1. பணத்தால் மகிழ்ச்சியை விலைக்கு வாங்க முடியாது என்பதென்னவோ உண்மை தான். ஆனால், சைக்கிளில் அழுது கொண்டே செல்வதை விட காரில் கலங்கிக்கொண்டே செல்வது மேல்.


2. பொய் சொல்வது ஒரு வேலையாகக் கருதப்படுமென்றால் நிறையப் பேர் கோடீஸ்வரர் ஆகியிருப்பார்கள்.


3. நான் பெரும் கோடீஸ்வரர் ஆக ஒரேயொரு அடி தான் பாக்கி. எனக்குத் தேவைப்படுவதெல்லாம் பணம் மட்டும் தான்.


4. அவநம்பிக்கையாளரிடமிருந்து பணத்தைக் கடன் வாங்குங்கள். அவர் பணம் திரும்பி வருமென்று நம்பிக்கை கொள்ள மாட்டார். 


5. நான் சின்ன வயதில் பணமும், புகழும் மகிழ்ச்சியைத் தரும் என்று நம்பிக் கொண்டிருந்தேன். இப்போது வளர்ந்து பெரியவனான பின்பும் அது தான் சரி என்று நினைக்கிறேன்.


6. நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா இல்லையா என்று எவரும் கருதவில்லை என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில் ஒன்றிரண்டு வாகனத் தவணைகளை கட்டாமல் விட்டுப் பாருங்கள்.


7. எதிர்காலத்தில், பணவீக்கம்        மூலமாகவே எல்லோரும் பணக்காரர் ஆகி விடலாம்.


8. பணத்தை இரட்டிப்பாக்கப் பாதுகாப்பான வழி அதனை இரண்டாக மடித்து சட்டைப்பையில் பத்திரமாக வைத்துக் கொள்வது தான்.


9. பணத்தை விட அன்பு தான் பெரியது என்று சொல்கிறார்கள். அன்பாகப் பேசி வெறும் பத்து ரூபாய் கடனை அடைக்க முடியுமா?


10. என்னுடைய பிரச்னை என்னவென்றால் எனது மொத்தப் பழக்க வழக்கங்களையும் (gross habits) நிகர வருமானத்தையும் (net income) சமன் செய்ய முடியவில்லை என்பது தான்.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

Daniel Crosby - மணி மொழிகள்

பங்குச்சந்தை பதில்கள் - 14