Posts

பங்கு கேள்வி பதில் - 4

பங்கு கேள்வி பதில் - 4 கேள்வி : IPO என்று சொல்லப்படும் முதல் பொது வெளியீட்டை மேற்கொள்ளாமலேயே பங்குகளை வெளியிடலாமா ? பதில் : நிறுவனப் பிரிப்பு (Demerger) என்ற வகையில் வெளியிடலாம் . Motherson Sumi Wiring India நிறுவனம் இந்த வகையில் தான் வெளி வந்தது . அல்லது தலைகீழ் இணைப்பு (Reverse merger) என்ற அடிப்படையில் வெளியிடலாம் . ஏற்கெனவே சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்துடன் இணைப்பை மேற்கொள்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது . பதஞ்சலி நிறுவனம் இந்த வகையில் தான் வெளிவந்தது . ஏற்கெனவே சந்தையில் பட்டியல் இடப்பட்டிருந்த Ruchi Soya Industries நிறுவனத்துடன் அது இணைக்கப்பட்டது . கேள்வி : IRCTC பங்கு அவ்வளவு தானா ? 2021 அக்டோபரில் அது 1000 ரூபாயைக் கடந்தது . தற்போதைய விலை 883 ? பதில் : IRCTC நிறுவனப் பங்கின் PE வெகு தூரம் சென்று விட்டது . இனி EPS அதனை விரட்டிச் சென்று பிடிக்கும் வரை IRCTC பங்கு நின்று தான் செல்லும் . Avenue Supermart நிறுவனப் பங்கும் இதே நிலையில் தான் இருக்கிறது .  கேள்வி : Discounted cash flow கணக்குகளை எப்படிப் போடுவது ? பதில் : உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் இதுவரை எந்தப் பங்க...

பங்குச்சந்தை பனை ஓலைகள் - 1

பங்குச்சந்தை பனை ஓலைகள் - 1 1. Everything moves in cycles . Growth has its season . There are spring and summer , but there are also fall and winter . And then spring and summer again . As long as the roots are not severed , all is well , and all will be well . அனைத்துமே சுழற்சிக்கு உட்பட்டவை . வளர் பருவம் ஒன்று . வசந்த காலம் மற்றும் கோடைக்காலம் மற்றொன்று . இலையுதிர் மற்றும் குளிர்பனிக்காலம் பிறிதொன்று . பின்னர் மீண்டும் வசந்த காலம் ... வேர்கள் வெட்டப்படாமல் இருக்குமானால் அனைத்தும் நன்று . அனைத்தும் நன்றாகவே இருக்கும் . 2. Out of abundance he took abundance and still abundance remained . அவன் அபரிமிதத்திலிருந்து அபரிமிதத்தை எடுத்துக் கொண்டான் . அபரிமிதம் இன்னும் மீதமிருந்தது . 3. Make peace with patience . பொறுமையுடன் சமாதானமாயிருங்கள் . 4. Measure a thousand times and cut once . ஆயிரம் முறை அளந்து ஒரு முறை கத்திரி . 5. Begin to weave and God will give the thread . நெய்வதைத் தொடங்குங்கள் . ஆண்டவன் நூலை அனுப்புவான் . 6. The cheapest is always the most expensive . எது விலை குறைந்ததோ அதுவ...

பதிவு குறித்த ஒரு பதிவு

பதிவு குறித்த ஒரு பதிவு கேள்வி : எதற்காக எழுதுகிறீர்கள் ? யாருக்காக எழுதுகிறீர்கள் ? நீங்கள் எழுதுவதன் நோக்கம் நிறைவேறியதா ? பதில் : எழுதுவதன் நோக்கம் , குறிக்கோள் என்று ஆகப்பெரிய திட்டமிடல்கள் எதுவும் இல்லை . ஒரேயொரு நண்பரிடம் பங்குச்சந்தை குறித்த எனது எண்ணங்களை மணிக்கணக்காக பேசிக் கொண்டிருப்பதில் இது தொடங்கியது . பின்னர் அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் WhatsApp பதிவுகளாக இந்த எண்ணக் கருக்களை எழுதி அதனை பங்குச்சந்தையில் ஆர்வம் கொண்ட நண்பர்களுக்கு அனுப்புவதான பணி என்ற அளவில் இது தொடர்ந்தது . இந்தப் பதிவுகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை அடைந்ததும் பழைய பதிவுகளைத் தேடி எடுத்துப் படிப்பது கடினமானதாக இருக்கிறதென்று நினைத்த நண்பர் ஒருவரின் முன்னெடுப்பில் வலைப்பூவாக இது மலர்ந்தது . WhatsApp பதிவுகளில் இல்லாத நிரந்தரம் (permanence) வலைப்பூவிற்கு உள்ளது . மேலும் வலைப்பூ , தனிப்பட்ட ஒருவருக்கோ அல்லது குழு ஒன்றுக்கோ அல்லாமல் உலகம் முழுமைக்குமான ஒரு மேடையாகும் . ஏதாவது ஒரு கருத்தாக்கம் சரிவர புரிபடவில்லையென்றால் அதைக் குறித்து எழுதிப்பார்ப்பது சரியான ஒரு வழிமுறையாகும் . இன்னும் சொல்லப்போனால் அந்தக்...

விளிம்பு நிலை வர்த்தகம்

விளிம்பு நிலை வர்த்தகம் Marginal Trading  கேள்வி : Marginal trading என்பதைப் புரியும் படி விளக்க முடியுமா ? பதில் : அருமையான கேள்வி . விளக்குவதற்குக் கொஞ்சம் கடினமான கேள்வியும் கூட . இருந்தாலும் எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன் .  அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் வீடு ஒன்று விற்பனைக்கு வருகிறது . அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை 75 இலட்சம் என்பதாக ஒருமித்த கருத்து இருக்கிறது . இந்நிலையில் அந்த  வீடு 50 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது .  இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பை விற்றவர் marginal seller . வாங்கியவர் marginal buyer . தமிழில் இதனை விளிம்பு நிலை வர்த்தகம் என்பதாகச் சொல்லலாம் . அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஆயிரம் வீடுகள் இருப்பதாகக் கொண்டால் எங்கோ ஒரு ஓரத்தில் விளிம்பில் நடைபெறுவதான வர்த்தகம் இது . இதனைக் குறித்து அந்த அடுக்குமாடிவாசிகளின் எண்ணப்போக்கு என்னவாக இருக்கும் ?  ஏதாவது பணமுடை காரணமாக இவ்வாறு குறைந்த விலையில் விற்றிருக்கலாம் . வாங்கியவருக்கு அதிர்ஷ்டம் . வாங்கியவர் வீட்டை விற்றால் உடனடியாக இலாபம் பார்க்கலாம் . வீட்ட...

சார்லி முஞ்சர் மணி மொழிகள் - 2

சார்லி முஞ்சர் மணி மொழிகள் - 2 CHARLIE MUNGER Quotes - 2 1. The first rule of compounding is never interrupt it unnecessarily . கூட்டுப் பெருக்கத்தின் முதல் விதி அதனைத் தேவையின்றி இடர்ப்பாடுகளுக்கு உள்ளாக்கக் கூடாது என்பதாகும் . 2. Knowing what we don't know is more useful than being brilliant . நமக்கு எது தெரியாது என்பதைத் தெரிந்திருப்பது நமது புத்திசாலித்தனத்தை விட உபயோகமானது  . 3. Optimism has no place in accounting . நன்னம்பிக்கைக்குக் கணக்கியலில் இடம் இல்லை . 4. The economics are irrelevant if you don't have trust . உங்கள் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் உங்கள் பொருளியல் பொருத்தமற்றதாகி விடும் . 5. If people weren't so often wrong we wouldn't be so rich . மக்கள் அடிக்கடி தவறு செய்யாமல் இருந்திருப்பார்களேயானால் நாங்கள் இவ்வளவு பணக்காரர்கள் ஆகியிருக்க முடியாது . 6. There are answers worth billions of dollars in a 30 dollar history book . வெறும் 30 டாலர் மதிப்புள்ள வரலாற்றுப் புத்தகத்தில் கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள விடைகள் கொட்டிக் கிடக்கின்றன . 7.  I ...

அதிர்ஷ்ட மொழிகள்

அதிர்ஷ்ட மொழிகள் Luck quotes 1. I am a great believer in luck and I find the harder I work , the more I have of it - Thomas Jefferson நான் அதிர்ஷ்டத்தை மிகவும் நம்புகிறேன். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உழைக்கிறேனோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் கிடைக்கப் பெறுகிறது. 2. The secret of a lucky life is making the most of a bad moment அதிர்ஷ்டமான வாழ்க்கையின் இரகசியம் , துரதிர்ஷ்டத்திலும் அதிர்ஷ்டத்தின் வேர்களை இனங்காண்பதில் உள்ளது. 3. No one is luckier than the person who believes in his luck - German proverb அதிர்ஷ்டத்தை நம்புகிறவரே மிகப்பெரிய  அதிர்ஷ்டக்காரர். 4. Better an ounce of luck than a pound of gold - Yiddish proverb கிலோ கணக்கில் தங்கம் கிடைக்கப்பெறுவதை விட கிராம் கணக்கில் அதிர்ஷ்டம் கிடைக்கப் பெறுவது மேலானது. 5. Every wall is a door - Ralph Waldo Emerson ஒவ்வொரு சுவரும் ஒரு கதவு . 6. Luck sometimes visits a fool , but it never sits down with him - German proverb அதிர்ஷ்டம் சிலசமயம் முட்டாள் ஒருவனைச் சந்திக்கும். ஆனால் அவனுடன் கூடிக் குடும்பம் நடத்திக் கொண்டிராது. 7. Luck has ...

நீள் வட்ட சுற்றுச் சாலை

நீள் வட்ட சுற்றுச் சாலை Obliquity உங்கள் முன்னர் இரண்டு பாதைகள் இருக்கின்றன . ஒரு பாதை மேடு பள்ளங்கள் இன்றி சமதளமாக இருக்கிறது . வாகன நெரிசல் குறைவாகவும் ஒரே சீராகவும் இருக்கும் . அவவப்போது எவ்வளவு பாதையைக் கடந்திருக்கிறீர்கள் என்பதற்கான அடையாளக்கற்கள் ஆங்காங்கே பதிக்கப் பட்டிருக்கும் . உங்கள் இலக்கை அடைவதற்கான நேரடியான பாதை இது . இன்னொரு பாதை ஏற்ற இறக்கங்களுடன் இருக்கிறது . வாகன நெரிசலும் அதிகம் . பெரும்பாலான சமயங்களில் வண்டி ஊர்ந்து மட்டுமே செல்ல முடியும் . அரிதான சந்தர்ப்பங்களில் தெருவே காலியாக வாகன நெரிசல் இன்றி இருக்கும் . அப்போது வண்டி பின்னால் செல்வது போன்ற ஓர் விசித்திரமான உணர்வு ஏற்படும் . ஆனால் வண்டி உண்மையில் முன்னேறித் தான் செல்கிறது . இவ்வாறு முன்னேறிச் செல்வதை அடுத்த நெரிசலின் போது தான் உங்களால் உணர முடியும் . இது மட்டுமல்ல , நீங்கள் உண்மையிலேயே இலக்கை நோக்கித் தான் பயணிக்கிறீர்களா என்பதை உங்களால் தீர்மானமாகச் சொல்ல இயலாது . அடையாளக் கற்கள் ஆங்காங்கே இருந்தாலும் அவை மாற்றி வைக்கப்பட்டிருப்பதான ஒரு தோற்றப் பிழை அவ்வப்போது ஏற்படும் . மேலும் உங்கள் இலக்கை அடைய இது ஒரு சுற்று...