விலை வருவாய் விகிதம்- ஒரு விளக்கம்
விலை வருவாய் விகிதம்- ஒரு விளக்கம் All about PE Price Earning multiple என்பதாக அழைக்கப்படும் விலை வருவாய் விகிதம் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வில் (Fundamental Analysis) ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. நிறுவனத்தின் ஒரு பங்கு, 15 ரூபாய் வருவாய் (Earnings Per Share - EPS) ஈட்டுவதாகக் கொள்ளலாம். சந்தையில் நிறுவனப் பங்கின் விலை 300 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது என்றால் அதன் விலை வருவாய் விகிதம் (Price Earning multiple - PE) 300 ÷ 15 அதாவது 20. இதற்கான சமன்பாடு PE = Share price ÷ EPS ஒவ்வொரு துறைக்கும் இது மாதிரி ஒவ்வொரு PE இருக்கிறது. இது போக ஒரு துறை சார்ந்த ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒவ்வொரு PE இருக்கிறது. அப்புறம் காளைச்சந்தை PE. கரடிச்சந்தை PE. Forward PE என்று சொல்லப்படும் முன்னோக்கு PE. பின்னோக்கு PE. வரலாற்று PE (Historic PE) முதலீட்டாளர்களின் தலை சுழன்றடிக்க இந்த PE விகிதம் மட்டுமே போதுமானது. எனில் எந்த PE ல் கவனம் கொள்வது? வாருங்கள், பார்க்கலாம். ஒரு பங்கு 100 ரூபாய்க்கு வர்த்தகமாகலாம். அல்லது 10000 ரூபாய்க்கு வர்த்தகமாகலாம். 100 ரூபாய் மலிவு என்றோ 10000 ரூபாய் உயர்வு என்றோ நாம...