Posts

Showing posts from June, 2025

Peter Lynch - மணி மொழிகள்

Peter Lynch - மணி மொழிகள் Peter Lynch Quotes  1. Never invest in any idea you can't illustrate with a crayon. ஒரு வண்ணக்குச்சியைக் கொண்டு உங்கள் எண்ணக்கருக்களை விளக்க முடியாத எதிலும் முதலீடு செய்யாதீர்கள். 2. The list of qualities an investor ought to have include patience, self-reliance, common sense, a tolerance for pain, open-mindedness, detachment, persistence, humility, flexibility, a willingness to do independent research, an equal willingness to admit mistakes and the ability to ignore general panic. ஒரு முதலீட்டாளரின் பண்பு நலன்கள்:  பொறுமை, சுய சார்பு, பொது அறிவு, வலி தாங்கும் திறன், திறந்த மனம், பற்றின்மை, நீடிப்புத்திறன், பணிவு, நெகிழ்வுத்தன்மை, தனிப்பட்டு ஆராயும் தன்மையில் விருப்பம், தவறுகளை ஏற்றுக்கொள்வதிலும் விருப்பம் மற்றும் மிகையச்சம் தவிர்த்தல். 3. Just because the price goes up doesn't mean you're right. Just because it goes down doesn't mean you're wrong. Stock prices often move on opposite directions from the fundamentals but long term the direct...

சலிப்பு சரியானது

சலிப்பு சரியானது Boredom Arbitrage  இந்த வலைப்பூவின் பதிவுகளைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இதில் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் மதிப்பு முதலீடு, நீண்ட கால நோக்கு, தாமதமான மனநிறைவு, பயணமே பரிசு முதலான கருத்தாக்கங்கள் சலிப்பூட்டுவதாக இருக்கலாம். ஒரு அயற்சியை, சோர்வை அது தரலாம். இதில் ஒரு முதலீட்டு வாய்ப்பு ஒளிந்திருக்கிறது.                  *                  *                   * பரஸ்பர நிதி SIP களைப் போல சலிப்புத் தட்டும் முதலீடு வேறு ஏதேனும் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட அளவிலான முதலீட்டை ஒரு மாதத்தின் குறிப்பிட்ட வேளையில் இடுகிறீர்கள். அடுத்த மாதத்திலும் அதே அளவிலான முதலீடு. அடுத்த மாதத்திலும் ... அதுவும் வருமான வரியைக் கணக்கில் கொண்டு பரஸ்பர நிதிகளின் வளர்ச்சித் திட்டங்களை (Growth option) தேர்ந்தெடுத்திருந்தால் ஆயிரங்களில் இருக்கும் அதன் NAV காரணமாக அதன் ஒரு அலகை (unit)...

வாழ்க்கை மொழிகள் - 6

வாழ்க்கை மொழிகள்- 6 1. Try to be a rainbow in someone else's cloud- Maya Angelou அடுத்தவர்களின் வாழ்க்கை என்கிற மேகத்தில் ஒரு வானவில்லாக இருக்க முயற்சி செய்யுங்கள். 2. When you look back on your life, it looks as though it were a plot but when you are into it, it's like a mess: just one surprise after another. Then later, you see it was perfect- Schopenhaner உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழும் அது கூச்சலும் குழப்பமுமாகவே இருக்கும். பின்னர் அதனைத் திரும்பிப் பார்க்கையில் அது சீரான ஒன்றாக இருக்கும். அதன் அனைத்துப் புள்ளிகளும் ஒரு கோலமாக இணையும். 3. Don’t ask, What do I want from life? Ask a different set of questions: What does life want from me? What are my circumstances calling me to do? - David Brooks வாழ்க்கையிலிருந்து நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்ற கேள்வியைக் கேட்காதீர்கள். வாழ்க்கை என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்ற கேள்வியைக் கேளுங்கள். அதன் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அறைகூவல் என்ன என்று ஆராயுங்கள். 4. Life does not ask what we want. It presents us with options- Thomas ...

குறியீட்டு விலக்க முதலீடு

குறியீட்டு விலக்க முதலீடு Deindex Investing சென்செக்ஸ் முதலான குறியீடுகளில் புதிதாக இணையவிருக்கும் நிறுவனப்பங்குகளை அவற்றின் இணைவிற்கு முன்னரே இனங்காண முடியுமா என்பது நண்பர் ஒருவரின் கேள்வி. முதலிலேயே அத்தகைய பங்குகளை வாங்கி வைத்திருந்தால் பின்னர் சென்செக்ஸை அடித்தொடரும் குறியீட்டு நிதிகள் அவற்றை வாங்கும் போது நாம் விற்று விடலாம் அல்லது அவற்றின் தொடர்ந்தவாக்கிலான இலாபப் பயணத்தில் பங்கு பெறலாம் என்பது அவரின் எண்ணப்போக்காக இருந்தது.  சென்செக்ஸ் குறியீட்டில் இணைவதற்கு அவை பெரு நிறுவனப்பங்குகளாக (large cap stocks) இருக்க வேண்டும். தரமான இருப்பு நிலைக் கணக்கையும் (balance sheet) திடமான நிதி விகிதங்களையும் (financial ratios) அவை கொண்டிருக்க வேண்டும். நீர்மை நிறை (liquidity) மிகவும் முக்கியம். இவை போக சென்செக்ஸில் ஏற்கெனவே இடம் பெற்ற துறைகளை அவை சிறப்பு செய்வதாக (compliment) இருக்க வேண்டும். இத்தகைய பங்குகளை முன்னரே இனங்காண்பது முடியாதது என்பதற்கு அடுத்தது. மேற்கண்ட விதிமுறைகளில் அவை பெரு நிறுவனப்பங்குகளாக இருக்கவேண்டும் என்ற விதிமுறை  இத்தகைய பங்குகளை முன்னரே இனங்கண்டு, அது முடியாதெ...