மூழ்கு செலவு மாயை
மூழ்கு செலவு மாயை Sunk cost fallacy தள்ளுபடி போக 7000 ரூபாய்க்கு புதிய மிக்ஸி ஒன்றை மனைவி வாங்கியிருந்தார் . அந்த மாடல் மிக்ஸியை வாங்கியதற்கான முக்கியமான காரணம் அதன் சிறிய ஜாடி . அடிக்கடி குறைந்த அளவில் உணவுப் பொருட்களை அரைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை . அதன் பொருட்டு சிறிய அளவுகளில் அரைக்கும் மிக்ஸியை வாங்கியாகி விட்டது . அந்த சிறிய ஜாடியைத் தலைகீழாகப் போட்டு அரைக்கும் வகையில் அந்த மிக்ஸி வடிவமைக்கப்பட்டிருந்தது . ஒவ்வொரு முறை அரைக்கும் போதும் மிக்ஸியின் அடிப்பகுதியில் பொருட்கள் ஒட்டிக் கொண்டு பாதி வீணாகி விடும் . அதைச் சுத்தம் செய்து பயன்படுத்துவது ஒரு கூடுதல் வேலையானது . பின்னர் விசாரித்த போது அந்த சிறிய ஜாடி உலர் பொருட்களை அரைப்பதற்கானது என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது . மற்றபடி அந்த மிக்ஸி 7000 ரூபாய்க்கு மதிப்பு முதலீடு என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் . எங்கள் அன்றாடத் தேவைக்கு அது பொருந்தி வரவில்லை . மிக்ஸியில் அரைத்தல் என்பது தின அளவில் செய்வதான ஒரு வேலையாகும் . இதனை இவ்வாறு பயன்படுத்த பயன்படுத்த தினமும் மன அழுத்தம் ஏறிக்கொண்டே இருந்தது . வேறு மிக்ஸியை வாங்குவதற...