இலவசம் இலவசமா ?
இலவசம் இலவசமா ? பங்குச்சந்தையில் இலவசம் இலவசம் அல்ல . ஆனால் இலவசம் இலவசம் . குறுகிய கால அளவில் இலவசம் இலவசம் அல்ல . நீண்ட கால அளவில் இலவசம் இலவசம் . நிறுவனங்கள் அவ்வப்போது 1:1 , 1:2 , 2:1 என்ற பல்வேறு விகிதங்களில் இலவசப் பங்குகளை ( Bonus Shares ) அளிப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் . இந்தப் பங்குகள் உண்மையிலேயே இலவசம் தானா ? அவ்வாறு இல்லையென்றால் அடிப்படையில் இவை என்ன ? முதலில் இந்த இலவச விகிதங்களைப் பார்க்கலாம் . 1:1 என்றால் ஏற்கெனவே உள்ள ஒரு பழைய பங்குக்கு ஒரு புதிய பங்கு என்று பொருள் . 1:2 என்றால் ஏற்கெனவே உள்ள பழைய இரண்டு பங்குகளுக்கு ஒரு புதிய பங்கு . 2:1 என்றால் ஏற்கெனவே உள்ள பழைய ஒரு பங்குக்கு இரண்டு புதிய பங்குகள் . இந்த விகிதத்தில் முதலில் குறிப்பிடப்படும் எண் நிறுவனம் வழங்கவிருக்கும் புதிய பங்குகள் . இரண்டாவதாக குறிப்பிடப்படும் எண் ஏற்கெனவே உள்ள பங்குகள் . நிறுவனம் ஒன்றின் பங்கு முதல் (Equity capital) 10 கோடி என்று கொள்ளலாம் . அதன் இருப்பு மற்றும் உபரி ( Reserves & Surplus) 500 கோடி . நிறுவனம் அதன் பங்கு முதல் மாதிரி 50 மடங்கு பணத்தை உபரியாக வைத்திருக்கிறது ...