பங்கு கேள்வி பதில் - 1
பங்கு கேள்வி பதில் - 1 கேள்வி : ITC க்கும் VST Industries க்கும் ROCE ல் ஏன் இத்தனை மாறுபாடு ? பதில் : ITC நிறுவனம் புகையிலையிலிருந்து கிடைக்கப்பெறும் இலாபத்தை FMCG , விருந்தோம்பல் , காகிதம் இன்னபிற துறைகளில் முதலீடு செய்கிறது ( ROCE - 30 % ) VST Industries புகையிலையிலிருந்து கிடைக்கப்பெறும் இலாபத்தை புகையிலையில் மட்டும் மறு சுழற்சி செய்கிறது ( ROCE - 40 % ) எனவே இந்த மாறுபாடு . ITC செய்வது சரியா தவறா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும் . கேள்வி : Wipro நிறுவனம் 2021 ஆம் ஆண்டுக்கான பங்காதாயமாக ஒரு பங்குக்கு ஒரு ரூபாய் வழங்கியிருக்கிறது . 100 பங்குகள் வைத்திருந்தால் வெறும் 100 ரூபாய் மட்டும் தானே பங்காதாயமாகக் கிடைக்கப்பெறும் ? பதில் : 100 பங்குகள் வைத்திருந்தால் பங்காதாயமாக வெறும் 100 ரூபாய் மட்டும் தான் கிடைக்கும் . 50 பங்குகளை வைத்திருந்தால் 50 ரூபாய் . 10 க்கு 10 . 3 க்கு 3 . ஆனால் அதன் IPO ல் 3 பங்குகளை வாங்கி இன்றளவும் வைத்திருப்பவர்களுக்கு 1148120 ரூபாய் கிடைக்கப் பெறும் . 2022 ஆம் ஆண்டுக்கு Wipro ஒரு பங்குக்கு ஆறு ரூபாய் பங்காதாயம் வழங்கியிருக்கிறது . IPO முதலீட்டி...