Posts

Showing posts from March, 2022

அரிய வளம்

அரிய வளம் (Scarce Resource) நான் ... அதைப்பற்றி அப்புறம் ...  நீங்கள் பிறந்த நாளிலிருந்து உங்களுக்கு ஒரு வங்கிக் கணக்கு துவங்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா ? அது மட்டுமல்ல , இந்தக் கணக்கில்  தினந்தோறும் 86400 ரூபாய் மதிப்புள்ள பணம் வரவு வைக்கப்படுகிறது.  நீங்கள் ஏழை பணக்காரன் என்பது முக்கியமில்லை. உங்கள் நிறம் கருப்பு சிவப்பு என்பது கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மதம் மொழி இனம் என்ற எந்தப் பாகுபாடும் காட்டப் படுவதில்லை. விடிந்து எழுந்தால் உங்கள் வங்கிக்கணக்கில் இந்தப் பணம் வரவு வைக்கப்பட்டு விடும். ஆனால் ஒரேயொரு சின்னப் பிரச்னை. இந்தப் பணத்தை அன்றன்றைய தினம் நீங்கள் செலவழித்து விட வேண்டும். நீங்கள் இந்தப் பணத்தைச் செலவழித்தாலும் சரி செலவழிக்காவிட்டாலும் சரி அன்றைய இரவில் இது பூஜ்யமாகி விடும்.  இந்தப் பணத்தைச் செலவழிக்காமல் வைத்திருந்து வட்டி வருமானங்களை எதிர்பார்க்க முடியாது. Overdraft வசதியெல்லாம் கிடையாது. இந்தப் பணம் கொஞ்சம் மர்மமானது. இந்தப் பணத்தைப் புரிந்து தெளிந்து பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் அடையப் பெறும் உயரங்கள் அளவிட முடியாத அளவுகளில் இருக்கும். இ...

நான் ஏன் பங்குத் தொகுப்பைப் பகிர்வதில்லை ?

நான் ஏன் பங்குத் தொகுப்பைப் பகிர்வதில்லை ? உங்கள் விருப்பப் பங்குகள் (Favourite Stocks) குறித்து இந்தப் பதிவுகளில் ஊடும் பாவுமாக எழுதுகிறீர்கள் . உங்கள் பங்குத் தொகுப்பை (Stock Portfolio) அவ்வப்போது முழுமையாகப் பகிரலாமே ; அது பலருக்கும் பயன்படுவதாக இருக்குமே என்பதாக நண்பர் ஒருவரின் கேள்வி . இந்தப் பங்குத் தொகுப்பு பகிர்வு குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம் . பல்லாண்டுகளின் காலப் பன்மயமாக்கத்தில் ( Time Diversification ) இந்தப் பங்குத் தொகுப்பு உருவாக்கம் பெற்றிருக்கிறது . ஒரு நூறு மடங்காளர் (100 bagger ) சிற்சில ஐம்பது மடங்காளர்கள் , சில பத்து மடங்காளர்கள் , பல ஐந்து மடங்காளர்கள் , பற்பல இரண்டு மடங்காளர்கள் என்பதாக இந்தத் தொகுப்பு இருக்கிறது . சில பங்குகள் வாங்கிய விலைக்கே ஊசலாடிய வண்ணமாக இருக்கின்றன . இன்னும் சில வாங்கிய விலைக்கும் கீழே வர்த்தமாகிக் கொண்டிருக்கின்றன . நூறு மடங்காளர் பங்குகளிலிருந்து  கிடைக்கப்பெறும் பங்காதாயம் குறைந்த பட்சம் 20 % என்ற அளவில் இருக்கிறது . ஐம்பது மடங்காளர் என்றால் 10 % பத்து மடங்காளர் என்றால் 5 % என்ற வாக்கில் இது குறைந்த வண்ணமாக இருக்கிறது . பங்குத்...

ஜென் கதைகள் - 2

ஜென் கதைகள் - 2 1. புல்லின் நுனியில் பிரபஞ்சம் மதிப்பு முதலீட்டாளர்களின் கழகம் (Value Investors Club) ஒன்று ஒவ்வொரு வருடமும் முதலீட்டாளர் மாநாடு ஒன்றை நடத்துவது வழக்கம் . அந்த மாநாட்டின் முத்தாய்ப்பான நிகழ்வாக ஒரு முதலீட்டாளர் தனித்துவமான (unique) பங்கு ஒன்றைப் பரிந்துரை செய்வது வழக்கம் . ஒருமுறை வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த முதலீட்டாளர் ஒருவர் தன்னிகரற்ற பங்கு ஒன்றைப் பரிந்துரைத்தார் . அனைத்து முதலீட்டாளர்களும் இந்த நிறுவனப் பங்கை எவ்விதம் இனங் கண்டீர்கள் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர் . அது அவர்கள் நடத்தும் PMS (Portfolio Management Services) ல் இடம்பெற்ற பங்கேயன்றி வேறில்லை . அந்த முதிர்ந்த முதலீட்டாளர் தொடர்ந்து சொன்னது : நாம் இவ்வாறு தான் நம்  மகிழ்ச்சியைத் தேடி எங்கெங்கெல்லாமோ அலைந்தவாறு இருக்கிறோம் . ஆனால் நம் வீட்டு வாசற்படிக்கு அடியில் முளைத்திருக்கும் புல்லின் நுனியில் நம்மைச் சுற்றியுள்ள மொத்தப் பிரபஞ்சமும் தெரிவதைக் காண மறந்து விடுகிறோம் . 2 . வானவில்லைத் துரத்தினவன் ஜென் குருவிடம் முதலீட்டாளர் ஒருவர் மதிப்பு முதலீடு முழுவதையும் கற்றுத் தேர்ந்தார் . பின் குருவிடம் பி...

பங்குச்சந்தை பதில்கள் - 6

பங்குச்சந்தை பதில்கள் - 6 கேள்வி : இப்போது தான் பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறேன் . ஆனால் சந்தை போக்குக் காட்டிய வண்ணம் இருக்கிறது ? பதில் : உங்களை அறிய ஒரு அரிய வாய்ப்பு . கேள்வி : சந்தை எப்போது சாதகம் ஆகும் ? பதில் : சந்தை எப்போது சாதகம் என்பதான காலக்கணிப்பில் ஈடுபடாமல் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்வதான காலப் பன்மயமாக்கத்தை மேற்கொள்ளுங்கள் .  கேள்வி : சந்தை சரிந்து கொண்டே வருகிறதே ? பதில் : ஆம் . ஆனால் ஒவ்வொரு விற்பவருக்கும் ஒவ்வொரு வாங்குபவர் இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள் .  கேள்வி : ஏற்கெனவே வாங்கிய பங்குகள் பங்கமாகி விட்டன . இந்த நிலையில் தொடர்ந்த வாக்கிலான முதலீட்டை எங்ஙனம் மேற்கொள்வது ? பதில் : ப ங்குகளின் விலை என்பது வேறு . பங்குகளின் ( உள்ளார்ந்த ) மதிப்பு என்பது வேறு . விலையில் கவனத்தைச் சிதற விடாமல் மதிப்பில் கவனத்தைக் குவியுங்கள் .  கேள்வி : எதற்கெடுத்தாலும் சந்தை ஏன் சரிய வேண்டும் ? பதில் : சந்தை ஒரே சீராக 45 டிகிரி என்ற பாகையில் பயணிப்பதால் கிடைக்கப்பெறும் வருமானத்தை விட இறங்கி பின் ஏறிச் சென்றால் கூடுதல் வருமானம் கிடைக்க ஏது...