Posts

Showing posts from October, 2021

பங்குச்சந்தை ஆங்கிலம் தமிழ் அகராதி

பங்குச்சந்தை ஆங்கிலம் தமிழ் அகராதி A Absolute Return முழுமையான வருமானம் Aesthetic Value அழகியல் மதிப்பு AGM - Annual General Meeting ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் ALGO Trading செய்முறை வர்த்தகம் Alpha சந்தை ஏற்ற இறக்கம் மற்றும் சீரற்ற தன்மையை ஈடு செய்த வருமானம் Alternative Investments மாற்று முதலீடுகள் Anchoring Bias நிலைநிறுத்தச் சாய்வு Angel Investing தேவதை முதலீடு Annual Report ஆண்டறிக்கை Annualised Return ஆண்டாண்டு வருமானம் Annuity ஆண்டாண்டு பணம் தரும் காப்பீடு Arbitrage விலை வேற்றுமை வாணிபம் Art & Antiques கலை மற்றும் பழங்காலப் பொருட்கள் Asset Allocation சொத்து ஒதுக்கீடு Authorised Capital அனுமதிக்கப்பட்ட மூலதனம் B Bailout பிணை விடுவிப்பு Balanced Funds சமநிலை நிதிகள் Balance Sheet இருப்பு நிலைக் கணக்கு Bankruptcy திவால் நிலை Basis Points ஒரு சதவிகிதத்தில் நூறில் ஒன்று Bearish கரடித்தனம் Bear Market கரடிச்சந்தை Behavioural Finance நடத்தை நிதியியல் Benign Neglect ஆசிர்வதிக்கப்பட்ட புறக்கணிப்பு Beta (பங்குகளின்) ஏற்ற இறக்க அளவுகோல் Bias சாய்வு Bid Ask Spread (பங்குகளை) வாங்குதல் ...

பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள் இந்த சதுரங்கக் கதை குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் . சில கதைகள் எத்தனை முறை கேட்டாலும் அலுப்பைத் தராது . அந்த வகையில் அந்தக் கதையை என்னுடைய பாணியில் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் .  ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் . சதுரங்க விளையாட்டு அவருக்கு ரொம்பவும் பிடித்தமானது . மணிக்கணக்காக அவர் அதனை விளையாடுவது வழக்கம் . அவர் மூளையைக் கூர் தீட்ட இந்த சதுரங்க விளையாட்டு மிகவும் உதவிகரமாக இருந்தது . ராஜிய பிரச்னையாக இருந்தாலும் சரி அல்லது சொந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி அந்தப் பிரச்னைகளின் தீர்வுகளுக்கு இந்த விளையாட்டில் பதில் கிடைத்தது . பங்குச்சந்தை அப்போது இருந்திருந்தால் ராஜா அதில் முதலீடு செய்திருப்பார் என்பதாகத் தோன்றுகிறது . பங்குச்சந்தை முதலீடு என்பது பல்லாயிரம் மனிதர்களுடன் ஒரே சமயத்தில் சதுரங்கம் விளையாடுவதேயன்றி வேறென்ன ? இந்த சதுரங்க விளையாட்டைக் கண்டுபிடித்தவர் தனது நாட்டுக் குடிமகன் என்று ஒரு நாள் ராஜாவுக்குத் தெரிய வந்ததும் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி . அவருக்கு மரியாதை செய்யும் முகமாக அரண்மனை சேவகர்களை விட்டு அந்த மேதையை அரசவைக்கு அழைத்து வரச் சொ...

ஒரு கேள்வி ஒரு பதில் -1

ஒரு கேள்வி ஒரு பதில் - 1 தற்போதைய சூழலில் (சென்செக்ஸ் 61000) நேரடியாகப் பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ளலாமா அல்லது பரஸ்பர நிதி வாயிலாக முதலீட்டை மேற்கொள்ளலாமா ? சென்செக்ஸ் தற்போது 61000 என்ற அளவுகளில் ஊசலாடிய வண்ணம் உள்ளது . சென்செக்ஸ் PE அதாவது விலை - வருவாய் விகிதம் 30 என்ற வாக்கில் உள்ளது . 16 என்பதை சென்செக்ஸ் சராசரி PE என்று கொண்டால் தற்போதைய PE உயர் அளவீட்டில் உள்ளது . இனி சந்தையின் போக்கு மூன்று வழிகளில் செல்வதாக இருக்கலாம் . ஒன்று சென்செக்ஸ் நிறுவனங்களின் வருவாய் (E) அதிகரித்து PE குறையலாம் . இரண்டாவது சென்செக்ஸ் சராசரி PE உயர் அளவீடுகளில் தொடர்ந்து நிலை பெறலாம் . மூன்றாவதாக முதலீட்டாளர்கள் நிதானத்திற்கு வந்து சென்செக்ஸ் தனது நீண்ட கால சராசரியான 16 என்ற அளவீட்டிற்கு இறங்கலாம் . இந்த மூன்றும் காலத்தின் கையில் உள்ளது . இந்த சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தொடர்ந்த வாக்கிலான முதலீட்டை எங்ஙனம் கொண்டு செல்லலாம் ? கடந்த காலத்தைக் கணக்கில் கொண்டால் நேரடியான பங்கு முதலீடுகள் நீண்ட கால நோக்கில் சராசரியாக 25 சதவீத CAGR என்ற அளவிலும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள் 20 சதவீத CAGR என்ற அளவிலும...

சமீப கால சாய்வு

சமீப கால சாய்வு Recency Bias நடத்தை நிதியியல்  (Behavioural Finance) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் . உளவியல் (Psychology) மற்றும் பொருளியல் (Economics) இந்த இரண்டின் கூடுகை (Intersection) நடத்தை நிதியியல் என்று அழைக்கப்படுகிறது . அதன் ஒரு அங்கமான சமீப கால சாய்வு குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம் . சில காலம் முன்பு வரை பங்குச்சந்தை முன் கணிப்பாளர்கள் (Forecasters) சந்தை புதிய உச்சங்களை எட்டும் என்பதாகக் கணித்த வண்ணம் இருந்தார்கள் . அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. 2008 ல் அமெரிக்க sub prime crisis க்குப் பின்னர் சந்தை நெட்டுவாக்கில் உயர்ந்த வண்ணம் இருந்தது . Trend is your Friend என்று ஒரு பங்குச்சந்தை சொலவடை உண்டு . சந்தை உயர்ந்து கொண்டே இருந்தால் இன்னும் கொஞ்சம் உயரும் என்று கணிப்பது தானே ஒரு சிறந்த கணிப்பாக இருக்க முடியும் ?! 2008 க்குப் பின்னர் சந்தைக்கு வந்த புதிய முதலீட்டாளர்கள் கரடிச்சந்தை என்பதை அறிந்திருக்க மாட்டார்கள் . கரடியைக் குறித்து அறிந்து வைத்திருப்பது வேறு . சந்தையில் கரடியிடம் கடிபடுவது வேறு . ஆக , சந்தைக்கு வானமே எல்லையாக இருந்தது . இந்தியப் பங்குச்சந்தை...

Nick Murray - சொ(பொ)ற்குவை

Nick Murray - சொ(பொ)ற்குவை 1. All successful equity investing is first and foremost an act of faith in the future . வெற்றிகரமான பங்கு முதலீடுகள் , அடிப்படையில் , எதிர்காலம் குறித்த நம்பிக்கை மட்டுமே . 2. People greatly overestimate the long-term risk of owning stocks and underestimate the long-term risk of not owning stocks . மக்கள் , பங்கு முதலீடுகளின் நீண்ட கால அபாயம் குறித்து மிகை மதிப்பீடு செய்பவர்களாகவும் பங்கு அல்லாத முதலீடுகளின் நீண்ட கால அபாயம் குறித்து குறை மதிப்பீடு செய்பவர்களாகவும் இருக்கின்றனர் . 3. Volatility isn't risk. Temporary decline isn't loss . ஏறி இறங்கும் தன்மை அபாயம் அல்ல . தற்காலிக இறக்கம் நஷ்டம் அல்ல . 4. You should never make an investment decision primarily based on taxes . ஆதாரமான முதலீட்டு முடிவுகளை வரி சேமிப்பின் மேல் கட்டாதீர்கள் . 5. Dollar cost averaging is the best portfolio manager the world has ever known . பண சராசரியே இந்த உலகின் ஆகப்பெரிய பங்குத் தொகுப்பு மேலாளர் . 6. The single most important variable in the quest for equity inve...

விதம் விதமான பங்குகள்

விதம் விதமான பங்குகள் ஒரு பங்கின் முக மதிப்பு 1 ரூபாய் . பங்கு 1 ரூபாய் என்ற முக மதிப்பிற்கே வெளியிடப்படுகிறது . பங்கு வெளியிடப்பட்டதிலிருந்து 90 பைசா , 80 , 70 ... என்றவாக்கில் கொஞ்சம் கொஞ்சமாக விலை குறைந்த வண்ணம் இருக்கிறது . மேலும் பங்காதாயம் என்று ஒரு பைசா கூட வழங்கவில்லை . கடைசியாக அதன் மதிப்பு ஒரு பைசா என்ற அளவில் பைசா பங்கு (Paisa Stock) ஆகி விட்டது . ஆனாலும் ஒரு சிலர் இன்னமும் 'பணம்' என்று அழைக்கப்படும் இந்தப் பங்கில் முதலீடு செய்தவண்ணம் இருக்கிறார்கள் . ரூபாய் பங்கை நான்கு தட்டுகள் கொண்ட அலமாரி முழுவதும் ஒருவர் அடுக்கி வைத்திருக்கிறார் என்று கொள்ளலாம் . அதிலிருந்து அவர் ஒரு பைசா கூட எடுத்துச் செலவழிக்கவில்லை என்பதாகவும் கொள்ளலாம் . காலப்போக்கில் அந்த அலமாரி முழுவதுமான அவரது பங்கு ஒரு தட்டின் மேலே ஹிண்டு பேப்பரை விரித்தால் எவ்வளவு இருக்குமோ அவ்வளவு மட்டுமே இருக்கும் . இன்னொரு பங்கைப் பார்க்கலாம் . முன்னதற்கு இது கொஞ்சம் பரவாயில்லை . பங்காதாயம் என்று வருடத்திற்கு 2.75 சதவீதம் மட்டும் வழங்குகிறது . இதற்கு வருமான வரியும் உண்டு . பங்கின் விலை 100 , 90 , 80 ... என்று குறைந...

இலக்கு குறித்த சில எண்ணங்கள்

இலக்கு குறித்த சில எண்ணங்கள் பங்குகளுக்கு இலக்கு விலை வைத்து விற்பது நம் காலை நாமே வெட்டிக் கொள்வதற்கு ஒப்பானதாகும் என்று பார்த்திருக்கிறோம் . முதலீட்டு வாழ்க்கையில் இலக்குகள் வைத்துக் கொள்ளலாமா , அப்படி வைத்துக் கொண்டால் அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன என்பதை பல்வேறு கோணங்களில் இந்தப் பதிவில் பார்க்கலாம் . முதலீட்டு வாழ்க்கையில் இலக்குகள் வைத்துக் கொண்டு அதனை நோக்கிப் பயணப்படுதல் தவறில்லை . ஆனால் இலக்கை சீக்கிரமாக அடைகிறேன் பேர்வழி என்று இந்தப் பயணத்தை விரைவு படுத்தக் கூடாது . கூட்டு வட்டியை விரைவு படுத்தினால் முதலுக்கே மோசம் நேரலாம் . இலக்கை எட்டிய பின்னர் எக்காரணம் கொண்டும் புதிய இலக்குகளை நோக்கி ஓடக்கூடாது . ஒரு சின்ன சொந்த உதாரணம் மூலமாக இதனை விளக்குகிறேன் . ஒரு காலத்தில் பங்கு மற்றும் இதர முதலீடுகள் மூலமான பணப்பாய்ச்சல் (cash flow) மாதம் 5000 ரூபாய் கிடைத்தால் போதும் என்பதான ஒரு இலக்கு இருந்தது . அந்த இலக்கை எட்டிய பின்னர் வாரம் 5000 கிடைத்தால் தேவலை என்பதான ஒரு எண்ணப்போக்கு . அந்த இலக்கையும் எட்டிய பின்னர் இப்போது வாரம் 10000 கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுக...

பங்கு தன் வரலாறு கூறுதல் - 1

பங்கு தன் வரலாறு கூறுதல் - 1 நதி தன் வரலாறு கூறுதல் , மலை தன் வரலாறு கூறுதல் என்று பள்ளிப்பருவத்தில் படித்திருப்பீர்கள் . நான் ஒரு நிறுவனப்பங்கு . கூடிய மட்டும் என் வரலாற்றைச் சுவை படக் கூற முயற்சிக்கிறேன் . நாங்கள் மொத்தம் முப்பது இலட்சம் பேர் . எங்கள் அனைவரின் மதிப்பும் சமமானது . அதை முகமதிப்பு என்று கூறுவார்கள் . எங்கள் முகமதிப்பு பத்து ரூபாய் . நாங்கள் ஒன்றாகவே பிறந்தோம் . ஒன்றாகவே வளர்ந்தோம் . ஆனால் , இப்போது எங்கள் முதலாளி IPO , value unlocking என்று புரியாத ஆங்கிலத்தில் ஏதேதோ பேசுகிறார் . எனக்கென்னவோ எங்களைப் பிரிக்கப் போகிறார்கள் என்பது மட்டிலும் புரிந்தது . நாங்கள் அது வரை பொருள் வடிவில் (physical format) தான் இருந்தோம் . இப்போது எங்களை மின்னணு (demat) வடிவில் மாற்றி விட்டார்கள் . பொருள் வடிவை விட இது பல்வேறு வழிகளில் பயனுள்ளதாம் . நாங்கள் இனி வெந்தணலில் வேக மாட்டோம் . நீரால் நாங்கள் நனைய மாட்டோம் . போலியாக எங்களை யாரும் உருவாக்க முடியாது . தபாலில் தவறிப் போகும் பிரச்னை இனி இல்லை . முக்கியமாக எங்களைப் பங்குச்சந்தையில் பட்டியலிட மின்னணு வடிவம் மிக அவசியமாம் . எங்களைப் பங்க...