வாழ்க்கை மொழிகள்- 7
வாழ்க்கை மொழிகள்- 7 1. வாழ்க்கை இரு பகுதிகளை உடையது. சென்ற காலம் என்ற கனா. வருங்காலம் என்ற அவா. 2. காலம் என்ற அரம் இராவும் போது ஓசையே கேட்பதில்லை. 3. வீட்டில் கடிகாரமே எஜமானராயிருக்க வேண்டும். 4. உண்மை என்ற பாணத்தை விடுமுன் அதன் முனையைத் தேனிலே தேய்த்துக் கொள்ளவும். 5. பாதி உண்மை என்றால் மிக எச்சரிக்கையாக இருங்கள். அது பாதி தவறாகவும் இருக்கலாம். 6. செயலால் நிறைவு பெறாத ஒவ்வொரு சொல்லும் வீண். 7. கைக்குள் அகப்பட்ட பொருள் மீது கவர்ச்சி பறந்து போய்விடும். 8. ஒருவர் அறிந்தது ஒருவரும் அறியார். இருவர் அறிந்தது அனைவரும் அறிவர். 9. சுகதுக்கம் சுழல் சக்கரம். 10. பிறர் தவறுகளை விரைவில் மறந்து விடுவதைத் தவிர சிறந்த நினைவாற்றல் வேறெதுவுமில்லை.