எழுதுவது எப்படி?
எழுதுவது எப்படி? Writing is thinking in paper என்று William Zinsser சொன்னதுடன் எனக்கு முழு சம்மதம். எழுதுவது என்பது காகிதத்தில் சிந்திப்பது. அல்லது Google Notes ல் சிந்திப்பது. கூறியது கூறல் கூடாது. தேவையில்லாத வாசகங்கள் தேவையில்லாத இடங்களில் இடம் பெறக்கூடாது. ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செக்காவ் கூறியது மாதிரி, திரைப்படத்தில், துப்பாக்கி ஒன்றை சுவரில் மாட்டியிருப்பதாகக் காண்பித்தால் படம் முடிவதற்குள் அந்தத் துப்பாக்கி வெடித்தே ஆக வேண்டும். வாசகங்களை அமைப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 'கண்டேன் சீதையை' என்பதற்கும் 'சீதையைக் கண்டேன்' என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இராமன் சீதையைக் காணாமல் கண்ணீர் விட்டுக் கவலையே வடிவாய் இருக்கிறான். சீதையைத் தேடிச் சென்ற அனுமன் அசோகவனத்தில் சீதை இராவணனால் சிறை பிடிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதனை இராமனிடம் தெரிவிக்க வருகிறான். அனுமன், சீதையைக் கண்டேன் என்று சொல்லியிருக்கலாம். சீதையை முன்னிறுத்திச் சொல்லும் போது அனுமன் சீதையைக் கண்டானா இல்லையா என்பது தொக்கி நிற்கிறது. அந்தத் தொக்கம் ஒரு வினாடி தான் என்றாலும் இராமனுக்கு அந்தக் கஷ்ட...