Naval Ravikant - மணி மொழிகள்
Naval Ravikant - மணி மொழிகள் Naval Ravikant Quotes 1. A fit body , a calm mind , a house full of love . These things cannot be bought - they must be earned . ஆரோக்கியமான தேகம் , அமைதியான மனம் , அன்பான இல்லம் . இவைகளை உடனடியாக விலைக்கு வாங்க முடியாது . காலப்போக்கில் சம்பாதிக்க வேண்டும் . 2. You make your own luck if you stay at it long enough . நீண்ட காலம் , ஒன்றில் நிலைத்திருந்தால் உங்களுக்கான அதிர்ஷ்டத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம் . 3. Earn with your mind , not your time . புத்தியைக் கொண்டு வருமானம் ஈட்டுங்கள் . நேரத்தைக் கொண்டு அல்ல . 4. All the benefits in life come from compound interest - money , relationship , habits . பணம் , உறவுகள் , பழக்கவழக்கங்கள் என்று வாழ்க்கையின் அனைத்து அனுகூலங்களும் கூட்டுப் பெருக்கத்தின் மூலமாகவே வரம் பெறுகின்றன . 5. The people who succeed are irrationality passionate about something . வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்கள் எதன் மீதாவது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட காதல் கொள்பவர்களாக இருக்கிறார்கள் . 6. The smartest people can explain things...